திறமையால் அரசுப் பணி கிடைக்கப்பெற்ற விளையாட்டு வீராங்கனை ரோஸி மீனாவுக்கு, சென்னை மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கத் தலைவர் செண்பக மூர்த்தி வாழ்த்து!

தஞ்சை மாவட்டத்தில், மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து கோலூன்றி தாண்டுதல் விளையாட்டுப் போட்டியில், இந்திய அளவில் கலந்து கொண்டு, தேசிய சாதனையை இரண்டு முறை முறியடித்தார் ரோஸி மீனா.

சர்வதேச உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றவர். தற்போது இவரது விளையாட்டுத் திறமையை அறிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனம் இளநிலை அலுவலர் பதவி வழங்கி ரோஸி மீனாவிற்கு கௌரவம் சேர்த்துள்ளது.

அதையடுத்து ரோஸி மீனா, இதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னை மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கத்தின் தலைவரும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளருமான எம். செண்பக மூர்த்தியிடம் அதிகாரப்பூர்வ அரசாணையை காண்பித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here