உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரைப்படம் கமல்ஹாசனின் 234-வது படமென்பதால் தற்காலிகமாக ‘KH234′ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6; 2023 அன்று மாலை 6 மணிக்கு வீடியோ வடிவில் வெளியாகிறது. டைட்டில் அறிவிப்புக்காக இயக்குநர் மணிரத்னம் பிரத்யேக வீடியோ உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தை ராஜ்கமல்பிலிம்ஸ் இண்டர்நேசனல், மெட்ராஸ்டாக்கீஸ், ரெட்ஜெயண்ட்மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர். மகேந்திரன், சிவாஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
மணிரத்னம், கமல்ஹாசன் மெகா கூட்டணி இணையும் படத்தின் உருவாக்கத்தில் இணைந்துள்ளவர்கள்:-
இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவாளர்: ரவிகே. சந்திரன்
சண்டைப் பயிற்: அன்பறிவு
எடிட்டர்: ஸ்ரீகர்பிரசாத்