பிரைம் வீடியோவுக்காக ஆர்யா, திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் வரும் நவம்பர் 24 அன்று வெளியாகிறது. இந்த வெப் சீரிஸை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.
தி வில்லேஜ் தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில், பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடர்.
மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி, மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோரின் எழுத்தில் உருவான இந்தத் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது.