தென்னிந்திய சினிமாவுலகிலிருந்து முதன்முறையாக ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருதுக்கு தேர்வான கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி!

கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் பணிபுரிந்துள்ளார்.

சாபு சிரில் மற்றும் கதிர் இருவரின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் பணியாற்றினார். அந்தப் படத்தில் அவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ என்ற பெருமை மிக்க விருது கிடைத்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது இந்த விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரத்தை எட்டியுள்ள தன்னுடன் பயணித்த தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு இந்த தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன் பாலாஜி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here