சென்னையின் முன்னணி காஸ்மெடிக் கிளினிக் நிறுவனம் ரீலுக்கிங். இந்த நிறுவனம் தனது 3-வது கிளையை, சார்லெட் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (OMR) படூரில் உருவாக்கியுள்ளது!
இதனை தமிழக அரசின் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவருடைய மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
‘ரீலுக்கிங்’ நிறுவனர் செல்வகுமார், சார்லெட் ஹெல்த்கேர் இயக்குநர் சுதர்ஷன் ராஜன், திருமதி பந்தி சார்லெட் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
7 ஆண்டுகளுக்கும் மேலாக காஸ்மெட்டிக் கிளினிக்கில் அனுபவமுள்ள ரீலுக்கிங், ஆண் மற்றும் பெண்களுக்கான முழு உடல் அழக்கூட்டல், தேவையற்ற ரோமங்களை அகற்றுதல், கொழுப்பு அகற்றம், உடல் எடை குறைப்பு, சரும பாதுகாப்பு, தழும்புகள் நீக்கம், கேச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளை தரமுடன் வழங்குகிறது.