நடிகர் விஜய்யின் பிறந்தநாள்! 3 மாதம் முன்பே கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் தொடக்கம்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு (ஜூன் 22) இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிற நிலையில், இன்று முதலே கனடா வாழும் தமிழர்கள் ‘கனடா விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கியுள்ளனர்.

இசையமைப்பாளர் பரத்வாஜின் மருமகன் கார்த்திக், கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். பரத்வாஜின் மகளும், பாடகியுமான ஜனனி, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். பாலாஜி என்பவர் துணைத் தலைவராக இருக்கிறார்.

அவர்கள் இணைந்து கனடாவில் இன்று முதல் விஜயின் பிறந்தநாள் வரை, தினமும் 500 கிலோ உணவை மக்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். மற்றும் தினமும் குறிப்பிட்ட பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை தங்களின் கார்களில் கட்டி, வலம் வர உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here