ஜெயம் ரவியின் ‘அகிலன்’, சூரியின் ‘விடுதலை’… கலைஞர் டிவியில் ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்!

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜைவிஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும்சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் 23-ந் தேதி திங்களன்றுகாலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும்பிற்பகல் 1.30 மணிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக நாயகனாக நடிக்கவிஜய் சேதுபதி வாத்தியாராகவும்சேத்தன்பவானி ஸ்ரீகவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை வாரிக்குவித்த “விடுதலை பாகம் 1” புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் 24-ந் தேதி செவ்வாயன்றுபிற்பகல் 1.30 மணிக்கு கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவிபிரியா பவானி சங்கர்சிரக் ஜனிஹரீஸ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் “அகிலன்” ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here