தமிழ் சினிமாவில் நிலையான இடம்பிடிப்பேன்! -‘அகம்’ பட இயக்குனர் சதீஷ் கர்ணா

சதீஷ் கர்ணா வளர்ந்து வரும் சுயாதீன திரைக்கலைஞர். போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்ட இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சீரியலில் உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வஞ்சப் புகழ்ச்சி என்ற இசை ஆல்பம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பிறகு இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பள்ளிக்குப்பம் என்ற குறும்படத்தை இயக்கினார். இதுவும் பலரது பாராட்டுக்களை பெற்றது.

உலக சினிமாக்களை பார்த்துப் பார்த்து சினிமாவை முழுவதுமாக கற்றுக்கொண்ட இவர் தற்போது அகம் என்ற படத்தை இயக்கியுள்ளார். யாருடைய உதவியுமின்றி சினிமாவில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு அகம் படத்தை இயக்கியுள்ள சதீஷ் கர்ணா தமிழ் சினிமாவில் தனக்கான நிலையான இடத்தை பிடிப்பேன் என்கிறார் நம்பிக்கையோடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here