சிறப்பான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கப் போகும் ‘சிரோ’ படத்தை தயாரிக்கும் ‘மில்லியன் ஸ்டுடியோஸ்.’ உற்சாகமாக தொடங்கியது படப்பிடிப்பு!

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வெப்பன்’ படத்தை தயாரித்த ‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ்.மன்சூர் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘சிரோ.’

மலையாளத்தில் ‘பதினெட்டாம் பாடி’, ‘வாலாட்டி’ உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சாப்ரியா கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ‘போர்தொழில்’ லிஷா சின்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளம்பரப்பட இயக்குநர் விவேக் ராஜாராம் இந்த படம் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 27; 2023 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் பேசும்போது, ‘‘படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம்.

எங்களின் முதல் தயாரிப்பான ‘வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே இந்த ‘சிரோ’ திரைப்படமும் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். அதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் / அனிமேஷன் கலைஞர்களை பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு: கிஷன் சி.வி
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா. ரேகா டி’ஒன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here