ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்; ப்ரீ ரிலீஸ் பிஸினஸால் படக்குழு மகிழ்ச்சி!

பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் நாயகனாக வளர்ந்து வருவதால் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திரில்லர் டிராமா ஜானரில் அவர் நடிக்கும் ‘பார்க்கிங்’ படத்தையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த சூழலில், படம் வரும் டிசம்பர் 1;2023 அன்று வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், ‘சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ கே.எஸ்.சினிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

சரியான திட்டமிடல் மற்றும் அதை செய்லபடுத்துவதன் மூலமாக முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் படக்குழு முடித்துள்ளது. அதையடுத்து படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ ரிலீஸ் பிசினஸூம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – சாம் சிஎஸ்
பாடல்கள் – யுகபாரதி
ஒளிப்பதிவு – ஜிஜு சன்னி
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
கலை – என்.கே.ராகுல்
நிர்வாகத் தயாரிப்பாளர் – டி.முருகேசன்
சண்டைப் பயிற்சி – தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு ஆடைகள் – ஷேர் அலி
நடனம் – அப்சர்
விஎஃப்எக்ஸ் – டிடிஎம்
ஒலிக்கலவை – ராஜகிருஷ்ணன் எம்.ஆர்.
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா
வடிவமைப்பு – யெல்லோடூத்ஸ்
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here