இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தொடங்கிய படத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக வழங்கும் படம் ‘ஃபைட் கிளப்.’
‘உறியடி’ படத்தை இயக்கி கதைநாயகனாக நடித்து கவனம் ஈர்த்த விஜய் குமார் இந்த படத்தில் கதைநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்க, படத்தின் கதையை சசி எழுதியுள்ளார்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த படத்தை, ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா தயாரித்திருக்கிறார். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய்குமார் பணியாற்றியுள்ளார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, கதாநாயகனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. படம் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது.
படைப்பில் பங்களிப்பு:-
இசை – கோவிந்த் வசந்தா
கலை இயக்கம் – ஏழுமலை ஆதிகேசவன்
படத்தொகுப்பு – கிருபாகரன்
சண்டைக் காட்சி – விக்கி, அம்ரீன், அபுபக்கர்