ராஜாஜி, சுஷ்மா ராஜேந்திரா, பிரியங்கா மோகன் நடித்த ‘டிக்டாக்’ படத்தின் பாடலுக்கு கிடைத்துவரும் வரவேற்பு!

ராஜாஜி நாயகனாகவும், சுஷ்மா ராஜேந்திரா நாயகியாகவும், பிரியங்கா அருள் மோகன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கும் படம் ‘டிக்டாக்.’ இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகும் இந்த படத்தில் முருகானந்தம், சாம்ஸ், நமோ நாராயணா , வினோதினி, சஞ்சனா சிங், மதுசூதனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘எம்.கே.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்து, தனது குழுவினருடன் இணைந்து இயக்கியுள்ளார் மதன்குமார்.

இந்த படத்தின் தூரிடாதே’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டோனி செயின் மற்றும் முருகன் செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவையும், ரொசாரியா இசையையும், ராஜேஷ் செல்வராஜ் படத்தொகுப்பையும், பிரபு சதீஷ் நிர்வாக தயாரிப்பையும் , சுரேஷ் மாரிமுத்து இணை தயாரிப்பையும், பிரபு சதீஷ் இணை இயக்கத்தையும், கவனித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here