நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் முதற்கட்டப் பணிகளை, நாகேஷின் நினைவு நாளில் துவக்கிவைத்த இயக்குநர் பாக்யராஜ்!

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் இளைய மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் தயாராகி வருகிறது.

இந்த படம் ‘பகல் வேஷம்’ என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைக்களத்தையும் கொண்டு உருவாகிறது.

பரபரப்பாக பேசப்பட்ட ‘டூ ‘எனும் படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அக்ஷயா கதாநாயகியாக நடிக்க தீபா சங்கர், லொள்ளுசபா ஜீவா, ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல்.பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , ஈரோடு எம்.ஜி.ஆர். ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தை ‘ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன் தயாரிக்கிறார்.

நாகேஷின் நினைவு நாளான இன்று (31.01.2024) அதற்கான முதற்கட்ட பணிகள் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் வாழ்த்துகளுடன் துவங்கியது.

பிஜேஷ் நாகேஷ், சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்த அனுபவமுள்ளவர்.

உருவாக்கத்தில் உறுதுணை:
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: ஷாஜகான்
பாடல்கள்: செந்தமிழ்
மக்கள் தொடர்பு: வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here