‘லியோ’ ரிலீஸ் நாளில், பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் நாக்ஸ் ஸ்டுடியோஸ்!

பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பகவந்த் கேசரி.’

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அதிரடி டிரெய்லர் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான நாக்ஸ் ஸ்டுடியோஸ் அதன் முதல் வெளியீடாக இந்த படத்தை வெளியிடவுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. படம் வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகிறது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட நாக்ஸ் ஸ்டுடியோ தயாராகி வருகிறது.

தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் நாக்ஸ் ஸ்டுடியோ விரைவில் வெளியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here