எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் ‘மோகினிப் பட்டி’ படத்தின் கதையைச் சொல்கிறார் இயக்குநர் ஜெயவீரன் காமராஜ்!

பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவி இயக்குநர் ஜெயவீரன் காமராஜ் இயக்கும் படம் (Web Movie) ‘மோகினிப் பட்டி.’

இந்த படம் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடிக்க, பேண்டஸி திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியிருக்கிறது.

பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஃபிலிம் அகாடமியொன்றில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை, நீரின்றி அமையாது உலகு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், இசை ஆல்பங்களையும் என்று இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள். அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊரின் சம்பிரதாயத்தைச் சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.

படப்பிடிப்பு திருச்சி மாவட்டத்தில் கல்லுப்புலியான் கோவில், காவேரிப் பாலம், ஏர்போர்ட் அருகேயுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here